முழங்காவில் பகுதியில் வாள்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்காக தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் இருந்து இளைஞர் குழுவொன்று முழங்காவிலுக்கு சென்றுள்ளது.
அங்கு வாள்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரும் கொடிகாமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 10 அடி நீளமான கேக் ஒன்றே இவர்களினால் வாள்கள் மூலம் வெட்டப்பட்டுள்ளது.