கொழும்பு, ஓக.04
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உத்தேச அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏற்பாடுகளை வகுத்து அதற்கான சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.