ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்கள் கடைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களை சார்ந்தவர்கள் பூசணிக்காயை நடுவீதியில் உடைத்து கொண்டாடி வருவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு நடுவீதியில் பூசணிக்காயை உடைத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை இங்கல்ல, இந்தியாவிலேயே இவ்வாறான அதிரடி அறிவிப்பு வெளியானது. புதுச்சேரி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியே இவ்வாறான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நடு வீதியில் உடைக்கப்படும் பூசணிக்காய்களால் வாகன சாரதிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
எனவே, வீதியின் நடுவே பூசணிக்காய் உடைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீதியில் டைக்கப்படும் பூசணிக்காயால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிற செய்திகள்