உச்சத்தை தொட்ட பாண் விலை!

சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்பட்டமையை தொடர்ந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவிற்கான விலையை 13 ரூபாவினால் அதிகரித்துள்ளன.

இதனால் வெதுப்பக உற்பத்தி பொருட்களில் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார்.

இதற்கமைய பாண் ஒரு இறாத்தலின் விலை மேலும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கோதுமை மாவின் விலையை 250 ரூபாவினால் குறைக்கவுள்ளதாக நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

அத்துடன், கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் டொலர்கள் இல்லாமை காரணமாகவே கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கோதுமையுடன் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாகவும், அவற்றை விடுவித்தால் கோதுமை மாவின் விலை குறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கோதுமா மாவின் விலை அதிகரிக்கப்படுமாயின் அதற்கான காரணத்தை அறிந்துக்கொள்ள கோதுமை இறக்குமதி நிறுவனங்களுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை எமது செய்திபிரிவிற்கு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அது குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், கலந்துரையாடல்கள் இடம்பெறாத நிலையில், கோதுமை மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *