காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் தலைவர் ஒருவர் நேற்று (03) அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மூன்று மாணவர்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமுடியை கத்தரிக்காமல் பாடசாலைக்கு வந்தமைக்காக தாக்கப்பட்ட மூன்று மாணவர்களும் மாணவர் தலைவரும் மாணவர் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலினால் சிறு காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிற செய்திகள்