இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலான பரிந்துரைகளை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வாவிடம் இன்று (02) கையளித்தார்.
அவரது ஊடகப்பிரிவு அனுப்பி வைத்தள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
- வீட்டுப் பணியாளர்களுடைய குறைந்தபட்ச வயதை 18 ஆக ஆக்குதல்.
- 85,000 ஆகவுள்ள வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்தல்.
- வீட்டுப் பணியாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி ஃ ஊழியர் சேமலாப நிதியத்தை உருவாக்குதல்.
- ஹிஷலினி-189 எனும் வீட்டுப் பணியாளர் அவசர சேவை இலக்கத்தினை அறிமுகப்படுத்தல்.
உள்ளிட்ட பரிந்துரைகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.