ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு இன்று தீர்வு – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று ர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் என கூறினார்.

இதன்போது அனைத்து தரப்பினரையும் வைத்து இந்த பிரச்சினை விரிவாக பரிசீலிக்கப்படும் என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

Leave a Reply