‘போதைப்பொருளை இல்லாதொழிப்போம்’: மட்டக்களப்பில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும், மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சமூக நலன்விரும்பிகளால், இந்த போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, போதைப்பொருள் இல்லாதொழிப்புக்கான கோஷங்களை எழுப்பியும், வாசகங்களை ஏந்திய சுலோக அட்டைகளை தாங்கியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் ஆகியோரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டன. இதேவேளை, இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான வீதி நாடகமொன்றும் இடம்பெற்றது.

அண்மைய காலமாக மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் போதைப்பொருள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அச்சுறுத்தல்களை தொடர்ந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *