வடக்கில் 30 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அபாய வலயங்களாக அறிவிப்பு

Danger zone red stamp text on white

யாழ். மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அபாய பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 529 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 314 மரணங்களும் சம்பவித்துள்ளன.

இந்த நிலையில், கடந்த 14 நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு

அபாய பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, யாழில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், முல்லைத்தீவில் 5, கிளிநொச்சியில் 4, மன்னாரில் 4, வவுனியாவில் 3, மட்டக்களப்பில் 13, அம்பாறையில் 7,

திருகோணமலையில் 8, அநுராதபுரத்தில் 19, கம்பஹாவில் 15, களுத்துறையில் 15, குருநாகலில் 23, புத்தளத்தில் 13, கண்டியில் 23, மாத்தளையில் 12, நுவரெலியாவில் 13, கேகாலையில் 11, இரத்தினபுரியில் 17, பொலநறுவையில் 8, பதுளையில் 16,

மொனராகலையில் 11, காலியில் 20, அம்பாந்தோட்டையில் 12, மாத்தறையில் 17 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளும் அபாயமிக்க பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *