பாடசாலைகளை திறப்பதே முதல் குறிக்கோள் – கல்வி அமைச்சர்

விரைவில் பாடசாலைகளைத் திறப்பதே முதன்மை குறிக்கோள் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் உள்ள மாணவர்கள் பலர் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

நாட்டின் தொலைதூர பகுதிகளில், குறிப்பாக இணைய அணுகல் இல்லாத பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கு இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தயார்நிலை தொடர்பிலும் அவதானமாக உள்ளோம் என்றார்.

Leave a Reply