இரத்தினபுரி சிறுவன் மருத்துவ பரிசோதனைக்கு!

சுமார் 7 நாட்களாக வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த, இரத்தினபுாி, மலங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனை ரம்படகல்ல நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருணாகல், ரிதீகம வீதித்தடையொன்று நேற்று ரிதீகம காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டார்.

மேலும் இந்தச் சிறுவன் கடந்த 24 ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல்போயிருந்தார்.

அத்தோடு சிறுவனை மருத்துவ பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்கவுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, குருணாகல் ரிதீகம காவல்துறையினால் சிறுவன், பொறுப்பேற்கப்பட்ட விடயமறிந்த பெற்றோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ரிதீகம காவல்துறைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply