அவுஸ்திரேலியாவில் களமிறக்கப்பட்டுள்ள சுமார் 300 இராணுவம்!

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் உதவ இராணுவ வீரர்கள் சுமார் 300 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உணவு விநியோகம், வீடுகள் தோறும் நலவாழ்வுச் சோதனை நடத்துவது, குடியிருப்பாளர்கள் விதிகளை மதித்து நடப்பதை உறுதி செய்வது போன்றவற்றில் அவர்கள் பொலிஸாருக்கு உதவுவர்.

கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறு பணிகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இராணுவத்தின் உதவியை நாட முடிவெடுக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் கூறியது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. சிட்னி உட்பட பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த முடக்க நிலைக்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். இவ்வாறான நிலையிலேயே இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply