யாழில் ஹெரோய்னுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (03) தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1 இலட்சத்து 55 ஆயிரம் பணமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *