போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம் செலுத்த எளிதான வழிமுறை!

போதைப்பொருட்களை பயன்படுத்தி வாகனம் ஓட்டும் நபர்களை அடையாளம் காண்பதற்காக புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமென காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு , போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம் செலுத்துவதற்காக இலகுவான வழிமுறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வங்கி அட்டை அல்லது வேறு முறையொன்றின் ஊடாக அபராதம் செலுத்த முடியும்.

மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத்தின் படி புள்ளிகளைக் குறைக்கும் முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply