வடக்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் நேற்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த காலங்களில் கொரோனா அச்சுறுத்தல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வந்தமையினால்  மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம்  முதல் ஏனைய மாகாணங்களுக்கு செல்வதற்கான பயணத்தடை தளர்த்தப்பட்டதையடுத்து, வடக்கு மாகாணத்தை சேர்ந்த அரச மற்றும் தனியார் பேருந்துகள் வவுனியாவில் இருந்தும், வவுனியா ஊடாகவும் பயணிப்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply