ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – காமினி லொக்குகே

நாட்டின் தற்போதைய நிலையில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை ஏகமனதாக முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகளை நிறைவேற்ற 56 பில்லியன் ரூபாய் தேவை என கூறியுள்ளார்.

இருப்பினும் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் தற்சமயம் 56 பில்லியன் ரூபாய் நிதியை செலவழிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் பிரச்சினை குறித்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து தொழிற்சங்கத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

போராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்களுக்கு ஜனநாயக உரிமை காணப்படும் நிலையில் அதனை அரசாங்கம் தடுக்காது என்றும் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.

Leave a Reply