வவுனியாவில் 10 சிறைச்சாலை கைதிகள் உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (02.08) இரவு வெளியாகின.
அதில், நேரியகுளம் பகுதியில் பதினைந்து பேருக்கும், சலனிகம பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், விநாயகபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் மூவருக்கும், புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சாம்பல் தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், புதிய கற்பகபுரம் பகுதியில் ஒருவருக்கும், மருதமடு பகுதியில் ஒருவருக்கும், மாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைத்தியசாலை விடுதியில் ஒருவருக்கும், உடையார்கட்டு தெற்கு பகுதியில் இருவருக்கும், பட்டக்காடு பகுதியில் மூன்று பேருக்கும், சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் ஒருவருக்கும், ஒமேக்கா ஆடைத் தொழிற்சாலையில் இருவருக்கும், மாகா நிறுவனத்தைச் சேர்ந்த இருவருக்கும் என 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 10 பேர் வவுனியா சிறைச்சாலை கைதிகளாக உள்ளனர். அத்துடன் தமக்கான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தாமாக முன்வந்து பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.