எஸ்ட்ரா செனகா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள மக்கள் ஆர்வம்

எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்றைய தினம் 19,075 பேருக்கு கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் அமைக்கப்ட்டுள்ள தடுப்பூசி மையத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தடுப்பூசி மையம் 24 மணி நேரமும் செயல்படுவதுடன், நேற்றிரவும் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காணப்பட்டனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்தோடு தொடர்ந்தும் 5 ஆவது நாளாக, இலங்கையில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,000 ஐயும் தாண்டியுள்ளது. நாட்டில் நேற்று பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின்;எண்ணிக்கை 2,510 என்பதுடன், கடந்த சனிக்கிழமை 63 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *