கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமுல்!

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி இன்று முதல் அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து பூங்காக்களிலும், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply