அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை 5.9, 6.1 மற்றும் 4.6 ஆகிய ரிக்டர் அளவுகளில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் கரையோரத்தில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலைமைகள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியிடப்படும் என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply