எதிர்கட்சிகள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி!

<!–

எதிர்கட்சிகள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி! – Athavan News

பெகாஸஸ் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள்களில் பேரணியாக சென்றுள்ளனர்.

பெகாஸஸ் விவகாரம் குறித்து சபையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதன்காரணமாக எதிர்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகளும் அவ்வவ்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் 107 மணி நேரம் நடந்திருக்க வேண்டிய நாடாளுமன்ற அமர்வுகள் 18 மணிநேரம் மாத்திரமே நடத்துள்ளது. இதற்கிடையில் எதிர்கட்சிகள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply