கொவிட் -19: செம்மஞ்சள் கண்காணிப்புப் பட்டியல் பயண யோசனை கைவிடப்பட்டது!

கொவிட் ஆபத்துள்ள நாடுகள் பயண திட்டத்தில், சிவப்பு நிறத்திற்கு நகரும் அபாயத்தில் உள்ள செம்மஞ்சள் கண்காணிப்பு பட்டியலை உருவாக்குவதற்கான திட்டம், கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பயணத்திற்கு எளிய மற்றும் சமநிலையான அணுகுமுறை வேண்டும் என் கூறியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பிரிவுகள் இப்போது சேர்க்கப்படாது என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பயணத் துறை பிரமுகர்கள், ஒரு சிக்கலான அமைப்பு மக்களை பயணத்திலிருந்து தடுக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தனர்.

இந்த வாரம் அடுத்த மதிப்பாய்வை முன்னிட்டு, வெளிநாட்டு பயணத்திற்கான அரசாங்கத்தின் போக்குவரத்து விளக்கு அமைப்பில் ஒரு புதிய நிலை பற்றிய யோசனையை அரசாங்கம் பரிசீலித்து வந்தது.

இலக்கு திடீரென செம்மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாறும் அபாயத்தில் இருக்கும்போது அது மக்களை எச்சரித்திருக்கும்.

அதாவது பிரித்தானிய நாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தவிர அனைவருக்கும் பயணம் தடைசெய்யப்படும். அவர்கள் திரும்பும்போது ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

முன்மொழிவுக்கு எதிர்ப்பு திரண்டதால், பிரதமர் ஜோன்ஸன், வெளிநாடுகளுக்குச் செல்லும் விருப்பத்தை அங்கீகரித்தாலும், புதிய கொரோனா வைரஸ் வகைகள் பிரித்தானியாவிற்குள் நுழைவதைத் தடுக்க விரும்புவதாகக் கூறினார்.

Leave a Reply