போதை பொருள் பாவனையை தட்டிக் கேட்டவர் மீது சரமாரியான வாள்வெட்டு!

யாழ். வேலணை பகுதியில் சட்டவிரோத போதை பாவனையை தட்டி கேட்ட பிரதேச சபை உறுப்பினர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வேலணை கிழக்கு முத்துமாரி அம்மன் கோவிலடி பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை, போதை பொருள் விற்பனை மற்றும் மாட்டு திருட்டு போன்ற குற்றங்களை தடுப்பதற்கு தீவக சிவில் சமூகத்துடன் சேர்ந்து முன்னாள் வேலணை பிரதேச சபை உறுப்பினர் சிவனேசன் செயற்பட்டார்.
போதை பாவனையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *