பொருளாதார எழுச்சியில் இந்தியா!

உலக நாடுகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டிலிருந்து பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதற்கு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இருக்கின்றது.

கொரோனா காரணமாக, உலகவாழ் மானிட குலத்திற்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருளாதாரத்தையும் புரட்டிப்போட்டது.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரியளவில் பொருளாதார பாதிப்புக்கு உள்ளானது. பிரித்தானியாவிலும், கனடாவிலும், இதர ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைகள் தான் நீடித்தன.

இந்தியாவிலும் அமல்படுத்தப்பட்ட முடல்கல்கள் காரணமாக, பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறை, உணவகங்கள், உள்ளிட்ட பல்வேறு துறையினரும் முடங்கினார்கள்.

இந்தியாவினுடைய ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியும் நின்றுபோனது. அதுபோலவே 2ஆவது கொரோனா அலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதன்போதும், உற்பத்தித்துறையும் சந்தைப்படுத்தல் துறையும் அடிபட்டுப்போனது.

இருப்பினும், 3ஆவது கொரோனா அலையின் போது பாரியளவிலான இல்லை. இதனையடுத்து படிப்படியாக கொரோனாவின் தாக்ககளும் குறைந்த நிலையில் தற்போது இந்தியப் பொருளாதாரம் தலைதூக்கி வருகின்றது.

ஆனால் உலக நாடுகளைப் பொறுத்தவரையில் இந்தியா போன்று பொருளாதார வளர்ச்சியை காண முடியவில்லை. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

இதனால், பல தசாப்தங்களுக்குப் பின்னர் அந்த நாடுகளில் பொருட்களின் சடுதியான விலையேற்றம் இடம்பெற்றுள்ளதோடு, அன்றாடம் திரட்டும் பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு காரணமாக இருப்பது, உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பாகும். உக்ரேன் மீது ரஷ்யா பெப்ரவரி 24ஆம் திகதி படை நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.

இந்த தருணத்தில் அமெரிக்க உள்ளிட்ட இதர மேற்குலக நாடுகள் உக்ரேனுக்கு ஆயுத தளபாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் அள்ளி அள்ளி வழங்க ஆரம்பித்தன.

தற்போது ஒன்பது மாதங்களாகின்ற போதும் போர் நிறைவுக்கு கொண்டுவரப்படவில்லை.

மாறாக, உலக நாடுகள் ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டு பொருளாதாரத்தில் மிகக் கடுமையான நிலைமை காணப்பட்டாலும், அமெரிக்காவும், மேற்குல நாடுகளும் உக்ரேனுக்காக பில்லியன் கணக்கில் வாரியிறைக்கின்றன.

இந்த விடயத்தில் தான் இந்தியா தன்னை தற்காத்துக்கொண்டுள்ளது. இந்தியா, போர் உள்ளிட்ட வன்முறைக்கலாசாரம் நீடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றபோதும், மேற்குலகின் பக்கமோ அல்லது ரஷ்யாவின் பக்கமோ சாயாமல் நடுநிலையாக, அணிசேராக் கொள்கையை பின்பற்றி வருகின்றது.

இவ்விதமான இராஜதந்திர மூலோபாய நகர்வின் காரணமாக இந்தியா தன்னை தற்காத்துள்ளதோடு எதிர்கால பொருளாதார மீட்சித்திட்டத்தினையும் முறையாக திட்டமிட்டு அதனடிப்படையில் நகர்ந்து வருவதானால் பாரிய ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் இந்த ஆண்டில் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக மூடிஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியா 2023ஆம் ஆண்டில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்றும் மூடிஸ் உறுதி செய்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று முன்னரே கணித்திருந்த நிலையில் கடந்த  ஏப்ரல் முதலாம் திகதி முதல் வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக இருக்கும்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதார சூழற்சியில் சில மாறுபாடுகள் இருந்தாலும் 2022-2023 நிதியாண்டுகளில் 8.4 சதவீதமாகவும், 2023-2024 நிதியாண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கப் போகின்றது.

கடந்த 2022-2023 நிதியாண்டு நவம்பரில் இந்தியாவின் பொருளாதாரம் 7.9 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில்,  உத்தியோக பூர்வமான மதிப்பீட்டின் பிரகாரம்  மார்ச் 31-ஆம் திகதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளமை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்யதாகின்றது.

அதேநேரம், 2021ஆம் ஆண்டின் இறுதிக்காலாண்டில் பொருளாதாரம் கொரோனாவுக்கு  முந்தைய  பொருளட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி அளவு 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா, தனது இறைவரியை முறையாக வசூலித்தல், சில்லறை வணிகத்துறையை மேம்படுத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளால் பொருளாதார ரீதியாக கணிசமான வளர்ச்சியை அடைந்து கொள்ள முடியும்.

ஏனைய பல நாடுகளில் உள்ளதைப் போலவே, தொடர்பு தீவிர சேவைத் துறைகளில் பொருளாதார மீட்பானது சற்றே தேக்கமடைந்துள்ளது. அதேசமயம் ஒமிக்ரோன் லை குறையும்போது சேவைத்துறைகளிலும் வளர்ச்சி அதிகரிகப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இதேவேளை, பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருவதால் சேவைத்துறை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

அத்துடன் இந்தியாவின் அனைத்துமாநிலங்களிலும்  இப்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் இந்தியா இயல்பு நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

2022ஆம் ஆண்டின் மத்திய வரவு,செலவுத்திட்டத்தில் நாட்டின் உள்நாட்டு  வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.. அத்துடன், 2022-23 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதமாகவும், மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு 36சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதன்மூலம் தனியார் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அதற்கான பகிரங்கப் பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டது.

இதேவேளை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நுகச்சியானது பெரும்பங்கு வகிக்கிறது. இது இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் 5இல் மூன்று பங்கு பங்களிப்பைக் கொண்டுள்ளது. நுகர்வில் மந்தநிலை ஏற்படும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் ஆபத்துள்ளது.

ஆனால், இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் நுகர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளது. இந்த நிலைமையானது நீடிக்குமாக இருந்தால் இந்தியா தெற்காசிய நாடுகளுக்கு மத்திரமல்ல உலக வல்லாதிக்க நாடுகளுக்கும் முன்னுதாரணமாகவே இருக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *