அடிப்படை உரிமையை காப்பதில் கடமைப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

2023 மார்ச் 20ம் திகதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தி 340 உள்ளூராட்சி மன்றங்களையும் அமைக்க தேர்தல் ஆணைக்குழு கடமைப்பட்டிருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சர்வஜன வாக்குரிமை என்பது அடிப்படை சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மக்களின் இறையாண்மையின் ஒரு பகுதி என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தாமதம் செய்வது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ளூராட்சி அதிகார சபைகளின் தலைவர் அல்லது பிரதித் தலைவர்களாக இருந்த 18 மனுதாரர்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் உட்பட 31 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் மீதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனவே சுயாதீனமான சட்டப்பூர்வ அமைப்பாக தேர்தல்கள் ஆணைக்குழு, சரியான நேரத்தில் உள்ளுாராட்சி தேர்தலை நடத்தி, மக்களின் சுதந்திர உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என்று தாம் நம்புவதாக முஸ்தபா கூறியுள்ளார்.

உள்ளுாராட்சி தேர்தலில் தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசுக்கு உண்மையான விருப்பம் இருந்தால், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலுடன் 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளுாராட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு வழியேற்படுத்தி, ஓரிரு மாதங்களில் அதைச் செய்யலாம் என்று முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *