பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதி – மனோ கணேசன்

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போல் பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், “நானும், அமைச்சர் டக்ளஸ் தேவாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும் கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதியுடன் உரையாடினோம்.

பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐஜிக்கு பணிப்பதாக ஐனாதிபதி கூறினார். தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்பட்டதை போல், பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி கூறினார்.

அருகிலிருந்த பிரதமர் மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, யோகராஜன் ஆகியோரும் சாதகமான கருத்துக்களை பகிர்ந்தனர்.

மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.

பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51வீத உணவின்மை பிரச்சினை காணப்படுகிறது என கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்க கோரினேன். ஜனாதிபதி கொள்கைரீதியாக உடன்பட்டார்” என மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *