தென்னை மரங்களை தும்சம் செய்த காட்டு யானைகள்

புத்தளம் கல்லடி மதுரகம பகுதியில் சுமார் 50ற்கும் அதிகமான தென்னை மரங்களை காட்டு யானைகள் தும்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புத்தளம் கல்லடி மதுரகம பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து 50ற்கும் அதிகமான பயந்தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளது.

இவ்வாறு காட்டு யானைகள் தமது தோட்டத்திற்குள் புகுந்துள்ளதாக , வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும் அவர்கள் அசமந்த போக்காக செயற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யானைகளின் அச்சுறுத்தல்களால் இரவு நேரங்களில் அவசர நிலமைகளில் கூட வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *