மீகொடை, வட்டரெக்க சந்தியில் இன்று(03) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டியும், லொறியும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, 5 மாத குழந்தை அதனது பாட்டி மற்றும் முச்சக்கரவண்டி சாரதியுமே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்த குழந்தையின் தாயார் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.