இலங்கையில் 40 இலட்சம் குடும்பங்களின் அவல நிலை! அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணங்களை கோருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு வரி அறவிடுவதை விட வேறு வழிகள் இல்லை என அவர் இன்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

18 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் சமூர்த்தி உதவிகளை பெறுகின்றனர்.

4 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிக குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் முதியோர் கொடுப்பனவை பெறுகின்றனர்.

இதுதவிர, விசேட தேவையுடையோர் மற்றும் ஏனைய நிவாரணங்களையும் பலர் பெறுகின்றனர்.

இதற்கு மேலதிகமாக புதிதாகவும் உள்வாங்கப்படவுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், வரி அறவிடுவதன் மூலமே அந்த கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *