எதிர்காலத்தில் நிகழ்வுகளில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை கட்டாயமாகத் தேவைப்படும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தடுப்பூசி செலுத்த மறுப்பு தெரிவிப்பவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
ஏதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டையுடன், கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையையும் வைத்திருப்பது முக்கியமான அமையவுள்ளது.
கொரோனா தடுப்பூசியை இதுவரை செலுத்தாதோர், செலுத்த மறுப்போர் குறித்து சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்குமாறும் தெரிவித்தார்.