இனி வானொலி ஊடாகவும் கல்வி கற்கலாம்

நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் பயனடையக் கூடிய வகையில் தேசிய வானொலி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், கல்வி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று (02) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவலால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படாதவாறு இருக்க குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply