மொபைல் போனை பைபில் வைத்துக்கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கெதி!

மொபைல் போனை பைபில் வைத்துக்கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் செல்போன் போனின் பேட்டரி வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஒன்பிளஸ் நிறுவனம் தனது வெற்றிகரமான மாடலான நார்டு 2 5ஜி போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த மொபைல் போன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் நார்டு 2 மொபைலை வாங்கியுள்ளார். அவர், தனது பையில் மொபைலை வைத்துக்கொண்டு அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார்.

Advertisement

அப்போது பையிலிருந்த அவரது நார்டு மொபைல் போனின் பேட்டரி வெடித்துள்ளது. இது தொடர்பாக அப்பெண்ணின் கணவர் அன்குர் சர்மா என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், வாங்கி 5 நாட்களே ஆன நிலையில், மொபைல் போனின் பேட்டரி வெடித்துவிட்டது என்றும், இதனால் தனது மனைவிக்கு விபத்து ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், செல்போனின் பேட்டரி வெடித்தது தொடர்பான விசாரணையையும் தொடங்கியுள்ளது.

Leave a Reply