இலங்கையில் குரங்குக் காய்ச்சல் தீவிரமடையுமா? – சுகாதார அமைச்சு விளக்கம்!

நாட்டில் இரண்டு குரங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டுபாயைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்குக் காய்ச்சல் இருப்பது நேற்று  கண்டறியப்பட்டதையடுத்து, நாட்டில் இதுவரை இரண்டு குரங்குக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் விலங்குகளுக்கு பரவும் நோய் என்பதால், நெருங்கிய தொடர்பு இல்லாமல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இவ்வாறான நோயுற்றவர்களைச் சந்திப்பதால் இந்நோய் தாக்கும் என எண்ணி, நோயாளியை சந்திப்பதன் அடிப்படையில் தேவையற்ற பயத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்றும் இந்த நோயின் அறிகுறிகள் அம்மை நோய் போலவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவ ஆலோசனைக்கு அனுப்புவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குரங்குக் காய்ச்சல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு கூறியுள்ள போதிலும், நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் தொழில் இயங்கி வருவதாலும் விமான நிலையம் திறக்கப்பட்டதாலும் இந்த நோய் ஒரு வைரஸ் என்பதாலும் காற்றின் மூலம் பரவக்கூடியதாலும் நம் நாட்டிற்குள் இந்நோய் பரவும் அபாயத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *