திருகோணமலை – தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் மாணவப் பாராளுமன்ற தேர்தல் கல்லூரியின் முதல்வர் எஸ்.எம்.றஹீம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் மாணணவர் பாராளுமன்ற தேர்தலில் 501 மாணவர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் 91 உறுப்பினர்களை தெரிவு செய்ய 145 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் இத் தேர்தலில் தேர்தல் ஆணையாளராக செயற்படும் கல்லூரி முதல்வர் தெரிவித்தனர்.
தேர்தல் கடமையில் கல்லூரியின் ஆசியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.