நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட ஜனாதிபதி விசேட உத்தரவு!

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளு மன்றத்தில் இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி பொதுப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 12 ஆல் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply