பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கொழும்பு, அளுத்கடை நீதவான் இன்று (11) தீர்மானித்துள்ளார்.
ராஜகிரிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கிலிருந்து கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் வழக்குத் தொடுத்த சாட்சியங்கள் முன்னிலையாகாத காரணத்தினால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.