வடகிழக்கு கரையோரத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் நாளை (12) முதல் நாட்டின் வானிலையில் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், இன்று மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.