மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் புளியங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (11.11) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது போதையில் இருந்துள்ளார்.
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் புளியங்குளம் பகுதியில் மாலை 6 மணியளவில் குறித்த பேருந்தினை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர்.
அதன் போது சாரதி மது போதையில் இருந்தமையை உறுதி செய்ததையடுத்து அவரை கைது செய்தனர். பேருந்து புளியங்குளம் பொலிஸ் நிலையத்திலும் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.