திரவ தொற்று நீக்கி தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் எத்தனோலுக்கான இறக்குமதி வரியை, முன்னர்போன்று மீளவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் காலத்தில், திரவ தொற்றுநீக்கி தயாரிப்புக்காக, எத்தனோல் இறக்குமதி வரியானது, கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் மற்றும் ஜூன் 09 ஆம் திகதிகளில் இரண்டு தடவைகள் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த வரியை மீளவும் அதிகரிப்பதன் மூலம், அரசாங்கத்துக்கு 1.6 பில்லியன் ரூபா வரி வருமானத்தை எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கள் லீற்றர் ஒன்றுக்காக அறவிடப்படும் 25 ரூபா மதுவரியை, 50 ரூபாவாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், குறித்த வரி 25 ரூபாவாக குறைக்கப்பட்டது.
எனினும், அதன் இலாபம் நுகர்வோருக்கு கிடைக்காமையால், மீண்டும் அந்த வரியை அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.