கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த கைதி வெலிகந்த காட்டில் வைத்து கடந்த 10 ஆம் திகதி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.