நேற்று முதல் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டண திருத்ததில் மாற்றம் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் எவ்வித உடன்படிக்களும் ஏற்படவில்லை எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் ஒக்டோபர் 17ம் திகதி டீசல் விலை ரூ.15 குறைக்கப்பட்டு நேற்று ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.