வாகன இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டமை காரணமாக தற்போது குறைந்த விலைக்கு வாகனங்களை விற்கும் நிலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய பெறுமதியை விடவும் குறைந்த விலைக்கு வாகனங்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த சூழ்நிலையிலும் வாகன தரகர்கள் சட்டவிரோதமாக ஆதாயங்களை ஈட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் சுமார் 500 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவர்கள் நேற்றைய தினம் நுகர்வோர் அதிகார சபையில் முறையிட்டுள்ளனர்.