பல தசாப்தங்களாக இலங்கையின் இசைத்துறையில் ஈடு இணையற்ற பங்களிப்பை ஆற்றிவரும் இலங்கையின் பழம்பெரும் முன்னணி பாடகியான லதா வல்பொலவின் நலன் குறித்து கேட்டறிவதற்காகவும் பிறந்த தின வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று மாலை (11) அவரது இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
அவருடன் நீண்ட நேரம் உரையாடிய எதிர்க்கட்சித் தலைவர், அவருடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தமது பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.