இரசாயன உர தடையால் ஏற்பட்ட பாதிப்பு!

இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் பின்னர் பயிரிடப்பட்ட முதல் பெரும்போக அறுவடை கடந்த பெரும்போக அறுவடையுடன் ஒப்பிடுகையில் 100,000 மெற்றிக் தொன்களுக்கு மேல் குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான விவசாயம் தொடர்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் முந்தைய போகத்தில் சேமிக்கப்பட்ட உரங்களைப் பயன்படுத்தி அந்த ஆண்டின் சிறு போக பயிர்செய்கையினை மேற்கொண்டிருந்தனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தின் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஆறு லட்சத்து 81,521 ஹெக்டேர் நெல் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆண்டில் 61,394 இலட்சம் மெற்றிக் தொன் நெல்அறுவடை கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 பெரும்போகத்துடன் ஒப்பிடுகையில், 2022 பெரும்போகத்தில் 3,643 ஹெக்டேருக்கும் அதிக நெல் வயல்களில் பயிரிடப்பட்டது.

ஆனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி அந்தப் போகத்தில் 19 லட்சத்து 31,230 மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அக்காலப்பகுதியில் நெல் அறுவடை 11 இலட்சத்து 30,164 மெற்றிக் தொன்கள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2021ஆம் ஆண்டு இரசாயன உரப் பாவனையைத் தடைசெய்வதற்கு எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானமே நெல் விளைச்சல் பெருமளவு குறைவதற்கு முக்கியக் காரணம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தின் பேராசிரியர் சமன் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலும் 22,000 மெற்றிக் தொன் யூரியா உரம் நாளை மறுதினம் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையைப் பயன்படுத்தி இரண்டாவது தொகுதி யூரியா உரம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

யூரியாவின் முதலாவது கையிருப்பு 13,000 மெற்றிக் தொன் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது இருப்பு 22,000 மெற்றிக் தொன், மலேசியாவில் இருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *