பளுதூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளி பதக்கத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும் பளு தூக்கல் கழகத்திற்கும் மூன்று மாணவிகள் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இலங்கை பளுதூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) நவம்பர் மாதம் 10, 11 ஆகிய இரு நாட்களும் பொலனறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் – 2022 (National Weightlifting Championship – 2022) போட்டியில் வவுனியா பளுதூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும், பா.செரோண்யா (senior) ஆகியோர் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
வவுனியா பளு தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஞா.ஜீவனின் நெறிப்படுத்தலில் இம் மாணவிகள் தயார் படுத்தப்பட்டு பளுதூக்கும் போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்களை பெற்று வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் பளுதூக்கும் போட்டிகளில் வெற்றிபெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.