யாழ். போதனாவில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவணி – மக்களுக்கும் அழைப்பு!

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நீரிழிவு விழிப்புணர்வுக்காக நாங்கள் உங்களுடன் ஒரு நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். நீங்கள் சுகதேகியாக இந்த நடைப்பயணத்தில் ஈடுபட்டு இறுதியில் எங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கிலும் பங்கெடுக்குமாறு யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அழைப்பு விடுத்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது சூழல் சுகதேகியாக வாழ்வதற்கு பொருத்தமான பிரதேசம். இங்கே மரக்கறிகள், பழங்கள், மீன்கள் போன்ற நல்ல உணவுகள் கிடைக்கின்றன. 

ஆனால் சுகேதேகிக்கான உணவினை விடுத்து நோய் ஏற்படக்கூடிய உணவை உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். 30, 40 வயதினை அடைகின்ற பொழுது நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

எந்த உணவு முக்கியம்? ஏன் முக்கியம்? அதனை எவ்வாறு எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும், என்பதனை நாங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் ஒரு நோயாளி ஆகினால் பின்நாளில் பல சிரமங்கள் ஏற்படும். அன்றாட வாழ்வில் பல துன்பங்களை நாம் அனுபவிக்க நேரிடும்.

நோயாளியாக மாறிய பின்னர் அவரினால் குடும்ப உறுப்பினர்கள், ஏனையவர்களும் அல்லலுக்கு உள்ளாவார்கள். 

அது மாத்திரம் அல்ல, எங்களில் ஒருவர் நோயாளியாகினால் வைத்தியசாலை போன்ற எங்கள் நிறுவனங்களுக்கு பெரும் தொல்லை. ஆகவே நாங்கள் நோயாளி ஆகி நமக்கும், பிறருக்கும் தொல்லை ஏற்படுவதை தவர்க்க வேண்டும். ஏனெனில் வைத்தியசாலைகளில் போதியளவு வசதி தற்போது கிடைப்பதில்லை.

ஆகவே எமது உணவு பழக்கவழக்கங்கள், அன்றாட பழக்கவழக்கங்களினால் பல நோய்களை ஏற்படுத்திக்கொள்வதனை தவிர்க்க வேண்டும். 

தீய செயற்பாடுகளில் ஈடுபட்டு எமக்கே நாமே தீங்கினை ஏற்படுத்திக்கொள்கிறோம். இதனையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

இலங்கை போன்ற நாடுகளில் சுகதேகியாக வாழ்வது மிகவும் இலக்கு. பொருத்தமான உடற்பயிற்சி, நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல உணவுகள் போன்றன மிகவும் முக்கியமானது. நமக்காகவும், பிறருக்குமாக வாழ வேண்டும்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நீரிழவு விழிப்புணர்வுக்காக நாங்கள் உங்களுடன் ஒரு நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். நீங்கள் சுகதேகியாக இந்த நடைப்பயணத்தில் ஈடுபட்டு இறுதியில் எங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கிலும் பங்கெடுக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதியின் ஊடாக கச்சேரியினை அடைய இருக்கிறோம். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *