தனுஸ்க குணதிலகவின் பிணைக்கான செலுத்தவேண்டிய 20,000 அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அடுத்த வாரம் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுக்கும் போது இந்த பணத்தை செலுத்தவேண்டும்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரிகள் ஏற்கனவே சில தனிநபர்களிடம் உதவி கோரியுள்ளனர்.
வனிந்து ஹசரங்க ஏற்கனவே பெரும்தொகை பணத்தை வழங்கியுள்ளார்.
பணம் கிடைத்ததும் அதனை பிணைக்காக செலுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.