மல்லாவியில் இரத்த சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மல்லாவி சிறுநீரக நோய் சிகிச்சை நிலையத்தில் வருகின்ற திங்கட்கிழமை இரத்த சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளதாக மருத்துவ நன்கொடையாளர் கனடா செந்தில் குமரன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியளார் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாம் பல தசாப்தங்களாக தாயகத்தில் இருதய நோய் உள்ள நோயாளர்களுக்கும், கிளிநொச்சியில் நடமாடும் சேவை, நோயால் வாடும் நோயாளிகளுக்கு பலவித வாழ்வதாரங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறேன். 

இதற்கு பெருந்துணையாக உதவி புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முல்லைத்தீவு மல்லாவியில் சிறுநீரக நோயாளிகள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கிளிநொச்சி போன்ற இடங்களுக்குச் சென்று தான் இரத்த சுத்திகரிப்பு செய்யலாம். 

ஏற்கனவே கிட்னி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி,  இரண்டு நாளைக்கு ஒரு தடவை இந்த இரத்த சுத்திகரிப்புக்கு செல்ல வேண்டும்.  பொருளாதார நெருக்கடியில் பெரும் சவால்களை சந்தித்துள்ளார்கள். மிகப்பெரிய துர்பாக்கிய நிலை இந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி எனக்கு வந்திருந்தது. 

எனவே வருகின்ற திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மல்லாவி சிறுநீரக நோய் சிகிச்சை நிலையத்திற்கு இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு செய்து, அதனை திறந்து வைக்க இருக்கிறோம். 

இதில் ஒரு இரத்த இயந்திரத்திற்கு கனடாவில் இருந்து மறைந்த பரஞ்சோதி ஆசிரியரின் நினைவாக அவரின் பெயரினை சூட்டி வழங்க இருக்கிறோம்.

மருத்துவர்கள், தாதியர்கள், தொழில்நுடப் கலைஞர்கள், பணிபுரியும் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், மக்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும், தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *