பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் காரணமாக இலங்கைக்கான வெளிநாட்டு உதவிகள் இல்லாமல் போகக்கூடும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்கள் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்பட்டாலும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.