யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலயம் முன்பாக யாசகம் பெறும் ஒருவர் இன்றைய தினம் (26) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 68வது பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தார்.
குறித்த யாசகர் குடும்பம் சரியான வறுமையில் இருக்கையிலும், தனது சொந்த செலவில் இனிப்புகளை வாங்கி ஆலயத்திற்கு வருவோருக்கு மன ஆனந்தத்தோடு கொடுத்து மகிழ்ந்திருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றையதினம் கொண்டாப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.